அக்கரைப்பற்று புத்தகக் காட்சி (2023) இன்னும் ஒரு மாதத்தில்

Adjust the font size:     

நான்காவது அக்கரைப்பற்றுப் புத்தகக் காட்சி வழக்கம் போல இம்முறையும், தேசிய வாசிப்பு மாதமான ஒக்டோபரில் இடம்பெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
 
திகதி மற்றும் இடம் தொடர்பான விபரங்களை ஒருசில தினங்களில் அறியத் தருகிறோம். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இதை ஏற்பாடு செய்வதில் பல்வேறு சிரமங்களும் சுமைகளும் உள்ளன என்பதை நாம் எல்லோரும் நன்கறிவோம்.
 
என்றாலும், ஒரு பண்பாட்டுப் பெருவிழாவின் தொடர்ச்சியைப் பேண வேண்டும் என்றே விரும்புகிறோம். கையில் இருப்பது ஒரு சிறிய மெழுகுதிரியாக இருந்தால் என்ன; அதன் துணை கொண்டு சுடரேற்றி, திசைகளெங்கும் ஒளிவெள்ளம் பாய்ச்சுவோம்.
 
தோழமைகளே; நட்புறவுகளே;
உங்களது கருத்துக்களையும் பகிருங்கள்.
 
பேரன்புடன்,
சிராஜ் மஷ்ஹூர்.
பிரதான ஏற்பாட்டாளர்.
10.09.2023

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post