![]() |
| Image - Goodknight.in |
இலங்கையில் கடந்த சில தினங்களில் 1000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அதன் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி இவ்வருடம் இதுவரையில் 63000 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
