உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வட ஈராக்கில் கிறிஸ்தவ திருமண விழாவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 03 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை நடந்த இந்த சோக சம்பவத்தின் பின்னர், சிறு தீக்காயங்களுக்கு ஆளான மணமகனும், மணமகளும், தீ விபத்தில் இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதன்முறையாக ஊடகங்கள் முன் தோன்றினர்.
மணமகளின் குடும்பத்தினர் மற்றும் மணமகனின் தாய் உட்பட 113 பேர் தீ விபத்தில் இறந்தனர் மற்றும் சுமார் 150 பேர் தீக்காயம் அடைந்தனர்.
திருவிழாவை அழகுபடுத்தும் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக மங்களோத்சவ மண்டபத்தின் உரிமையாளர், பணியாளர்கள், பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்தவர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்துள்ளனர்.
