இலங்கை இராணுவ தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்து உதைபந்தாட்டம் மூலம் ஓய்வூதியத்துடன் அரசாங்கத்தில் ஒர் நிரந்தர ஊழியராக விரும்பினால் எதிர்வரும் 31.08.2023 வியாழன் காலை 7:30 ற்கு பொரளை Campbell Ground ல் நடைபெறவுள்ள தெரிவில் பங்குபெறுங்கள்.
உதைபந்தாட்டத்தில் நம்மவர்கள் அடைந்து வருகின்ற சிறப்பான முன்னேற்றம் கழக மட்டத்துடன் நின்றுவிடுகிறது.
பட்டம் பெற்றவர்கள் மற்றும் உயர்கல்வி கற்றவர்கள் மட்டுமே அரச தொழில் பெறலாம் என்றில்லாது உங்கள் விளையாட்டு திறமையும் உங்களுக்கு ஓர் அரச தொழிலை பெற்று தருகிறது. கல்வியில் பின்தங்கினாலும் விளையாட்டில் திறன்கொண்ட பல இளைஞர்கள் நம்மில் உள்ளனர்.
உங்கள் ஊரை அடையாளப்படுத்தி கழகத்திற்காக ஆடுவது பெருமைதான் என்றாலும் விளையாட்டே உங்களது நிரந்தர வருமானத்தை தர காத்திருக்கிறது என்றால் வேறு தொழில் தேடவேண்டியதில்லை.
எனவே இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பயனடையுங்கள்.
● வயதெல்லை :- 18 - 24
● இலவச மருத்துவ வசதிகள்
● சம்பளம் 50,000/=
மேலதிக தகவல்களுக்கு
0759332000 / 0717711674
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Sports
