மரம் நடுதலின் அவசியம் குறித்து சைக்கிள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்

Adjust the font size:     



மரம் நடுதலின் அவசியம் குறித்துசென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் விழிப்புணர்வு ஏற்படுத்திய இலங்கையை சேர்ந்த ஆசிரியர்
மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கன்னியாகுமரி வந்தது.
இலங்கை வடமகாணம் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் பிரதாபன் இவர் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது உறவினர்கள் கடந்த 1990 -முதல் சென்னை கோவிலம்பாக்கம் முகாமில் வசித்து வருகின்றனர்.
சமூக ஆர்வலரான இவர் மரங்கள் நடுதல், மழைநீர் சேகரிப்பு, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஜூலை 23-ம் தேதி சைக்கிள் பயணம் தொடங்கினார்.
தர்மலிங்கம் பிரதாபன் செய்தியாளரிடம் கூறுகையில் வரும் இளம் தலைமுறைகள் இந்த நாட்டை காக்க வேண்டும், மரம் நட வேண்டும் தண்ணீரை சேமிக்க வேண்டும், பறவைகளை பாதுகாக்க வேண்டும் இயற்கையினையும் பாதுகாக்க வேண்டும், விலங்குகளை பாதுகாக்க வேண்டும் பாதுகாத்தால் நீங்களும் வளமாக வாழலாம் உங்கள் பிள்ளைகளும் உங்கள் பேரப்பிள்ளைகளும் வளமாக இருக்கும்.
வரும் நாட்களில் நாட்டுக்காக பெரும் பாடுகள் பட வேண்டும் இளைஞர்கள் நல்ல வழியிலே நல்ல நோக்கத்தோடு இந்த உலகத்தை பாதுகாக்க வேண்டும்.
இந்தியா எத்தனையோ பொக்கிஷங்கள் கொண்ட நாடாக இந்த மண்ணில் இருக்கின்றது. இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்
இந்த நாடே இளம் தலைமுறைகள் கையில் தான் என்று அவர் கூறினார் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பயணம் தூத்துக்குடி, ராமநாதபுரம்,
திருச்சி , பாண்டிச்சேரி,வழியாக சென்னை சென்றடைய சுமார் -32 மாவட்டத்தை- 3000 கிலோ மீட்டரை ஒரு மாத பயணத்தை பயணித்து மரம் நடும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

மேலும் 22 -08- 23 அன்று சென்னை மெரினா கடற்கரையில் தனது பயணத்தை முடிப்பேன் என பிரதாபன் தெரிவித்தார்.

- கன்னியாகுமரி சமூக ஆர்வலர்
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post