இலங்கை போக்குவரத்து சபைக்காக எதிர்காலத்தில் 600 பஸ்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடும் 200 சொகுசு பஸ்களும், சாதாரண வீதிகளில் இயங்கும் 400 பஸ்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசெம்பர் மாதத்திற்குள் பஸ்கள் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிதாக வாங்கப்பட்டுள்ள 104 மெட்ரோ பேருந்துகள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நாட்டுக்கு வழங்கப்படும் என்றும், அந்த பேருந்துகளுக்கான கார்டு கட்டண முறைகள் தயாரிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 20ஆம் தேதிக்கு முன்னர் அவை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்